×

சாத்தான்குளம் ஒன்றியத்தில் திமுக கிராம சபை கூட்டம்

சாத்தான்குளம், பிப். 8:   சாத்தான்குளம் ஒன்றியம் தாமரைமொழி, விஜயராமபுரம், பண்டாரபுரம், அமுதுண்ணாக்குடி பகுதிகளில்  திமுக சார்பில் கிராமசபை சிறப்பு கூட்டம் நடந்தது. திமுக ஊராட்சி செயலாளர்கள் கணபதிபாண்டியன், தங்கவேல், சவுந்திரபாண்டி, அன்பரசு  தலைமை வகித்தனர். ஒன்றியச் செயலாளர் ஜோசப்  வரவேற்றார். இதில்   திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கராஜ், திமுக மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், திமுக பொதுக்குழு உறுப்பினரும், வைகுண்டம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் காவல்காடு சொர்ணகுமார், மாநில பேச்சாளர் செந்தூர் பாலகிருஷ்ணன், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற்றனர்.   பின்னர் பேசுகையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். கூட்டத்தில் சாத்தான்குளம் நகரச் செயலாளர் இளங்கோ, ஆழ்வார்திருநகரி ஒன்றியச் செயலளர் பார்த்திபன், மாவட்டப் பிரதிநிதி சரவணன், விவசாய அணி அமைப்பாளர் வியாகப்பன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஊராட்சி அமைப்பாளர் ஆனந்தபாபு, மற்றும் சமுத்திர பாண்டி, சிவா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : meeting ,DMK Gram Sabha ,
× RELATED காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது...