×

குலசேகரன்பட்டினத்தில் கிராமசபை கூட்டம் திமுக ஆட்சிக்கு வந்ததும் மதுக்கடைகள் மூடப்படும் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேச்சு

உடன்குடி, பிப். 8:   திமுக ஆட்சிக்கு வந்ததும் மதுக்கடைகள் மூடப்படும் என குலசேகரன்பட்டினத்தில் நடந்த கிராமசபை சிறப்பு கூட்டத்தில் தெற்கு  மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேசினார்.
 குலசேகரன்பட்டினம்  மீன்கடை பஜாரில் திமுக சார்பில் கிராமசபை சிறப்பு கூட்டம் உடன்குடி ஒன்றியச்  செயலாளர் பாலசிங் தலைமையில் நடந்தது. மாவட்ட துணை அமைப்பாளர்கள் வர்த்தக அணி  ரவிராஜா, சிறுபான்மை அணி ஷேக் முஹம்மது, மருத்துவ அணி பாலசிங் பாண்டியன்,  சிறுபான்மைப்பிரிவு சிராஜூ தீன்  முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர்  மகராஜன் வரவேற்றார்.  கூட்டத்தில் மக்களிடம் மனு்க்கள் பெற்று குறைகளை கேட்டறிந்த தெற்கு மாவட்ட  பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேசுகையில், ‘‘ திமுக ஆட்சிக்கு  வந்தவுடன் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும். மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் உடனடியாக  நிறைவேற்றப்படும். உடன்குடி அனல்மின்நிலைய வேலை வாய்ப்பில் உடன்குடி,  குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர் பகுதி மக்களுக்கு முன்னுரிமை வழங்க  வலியுறுத்தப்படும்’’ என்றார். கூட்டத்தில் மாணவர் அணி மாநில துணை  அமைப்பாளர் உமரிசங்கர், திருச்செந்தூர் ஒன்றியச் செயலாளர் ரமேஷ், உடன்குடி  நகரச்செயலாளர் ஜான்பாஸ்கர், பரமன்குறிச்சி ஊராட்சி செயலர் இளங்கோ, நகர  பொருளாளர் தங்கம், வக்கீல் ஜெபராஜ், உடன்குடி நகர இளைஞர் அணி  அமைப்பாளர் அஜய், ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் பாயிஸ், நிர்வாகிகள்  அலாவுதீன், முகமது இப்ராஹிம், நெய்னா முஹம்மது, பயாஸ், சுல்தான், மணி,  கொம்பையா, பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர்.

Tags : Anita Radhakrishnan ,speech ,MLA ,council meeting ,Kulasekaranpattinam ,DMK ,
× RELATED ஒன்றியத்தில் சமதர்ம ஆட்சி அமைந்திட...