புளியங்குடியில் மமக கொடியேற்று விழா

புளியங்குடி, பிப். 8: மனிதநேய மக்கள்  கட்சியின் 11ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி புளியங்குடி நகராட்சி அனைத்து வார்டுகளிலும் கட்சி கொடியேற்று விழா நடந்தது. நகர செயலாளர் செய்யது தலைமை வகித்தார். அனைத்து வார்டுகளிலும் மமக கொடியேற்றப்பட்டதுடன், புளியங்குடி அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பிஸ்கட், ரொட்டி  மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர்  முகம்மது அலி, மாவட்ட துணை தலைவர் அப்துர் ரகுமான், மமக மாவட்ட துணை  செயலாளர் அப்துல் மஜீத், விளையாட்டு அணி செயலாளர் மைதீன் பாதுஷா,  பொருளாளர் முகம்மது எகியா, எஸ்எம்ஐ துணை  செயலாளர் சாகுல் ஹமீது, ஊடகப்பிரிவு துணை செயலாளர் ஹமீத், குவைத்  மண்டல மமக செயலாளர் செய்யது, நகர தலைவர் பஷீர் ஒலி, செயலாளர்  வி.சாகுல் ஹமீது, இளைஞரணி செயலாளர் முகம்மது அசன், வணிகர் அணி செயலாளர்  முகைதீன், நகர துணை செயலாளர் செய்யது அலி, ரியாத் சீமான் மற்றும்  வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

× RELATED பால்குட திருவிழா