சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

களக்காடு, பிப். 8: களக்காட்டில் நாங்குநேரி உதவி கோட்ட காவல்துறை மற்றும் போலீஸ் நண்பர்கள் குழு சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. டிஎஸ்பி இளங்கோவன் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர்கள் சபாபதி, மேரிஜெமிலா முன்னிலை வகித்தனர். வள்ளியூர் போக்குவரத்து துறை ஆய்வாளர் பெலிக்ஸ்சன் மாசிலாமணி கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் மிதார் முகைதீன், மாணவ-மாணவிகள், போலீசார் கலந்து கொண்டனர்.

× RELATED அரிசி வியாபாரியிடம் ரூ.1.24 லட்சம் பறிமுதல்