கொளந்தாகவுண்டனூர் கார்னரில் டிராபிக் சிக்னல் இல்லாததால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

கரூர், பிப். 8: கொளந்தாகவுண்டனூர் கார்னரில் விபத்துக்களை தடுக்க சிக்னல் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.கரூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் கொளந்தாகவுண்டனூர் பிரிவு சாலை உள்ளது. நான்கு சாலைகள் சந்திக்கும் இடமாக இருப்பதால் வாகனங்கள் எதிரே வருவது தெரியாமல் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் முட்டி மோதி செல்கின்றன.இந்த இடத்தில் நான்கு திசையிலும் சிக்னல் அமைக்க வேண்டும். சிக்னல் அமைத்தால் வாகனங்கள் தடுமாற்றம் இன்றி செல்ல முடியும். திருச்சி சாலையில் பயணிக்கும் வாகனங்களும், பசுபதிபாளையம் சாலையில் இருந்து வரும் வாகனங்களும் சிக்னல் இல்லாததால் தடுமாற்றம் அடைகின்றன. எனவே விரைவில் போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

× RELATED போக்குவரத்து சிக்னல் திறப்பு