×

அரவக்குறிச்சி பகுதியில் சூரியகாந்தி பயிரை நாசமாக்கும் கிளிகள் விவசாயிகள் வேதனை

அரவக்குறிச்சி, பிப்.8: அரவக்குறிச்சி பகுதியில் சூரியகாந்தி பயிரிட்டுள்ள விவசாயிகள் கிளிகளின் தொல்லையால் நஷ்டம் ஏற்படுவதாக கவலை தெரிவித்து உள்ளனர்.அரவக்குறிச்சி ஒன்றியத்தில் வெஞ்சமாங்கூடலூர், புங்கம்பாடி, ஈசநத்தம், அம்மாபட்டி, சோழதாசன்பட்டி, எருமார்பட்டி, ஆலமரத்துப்பட்டி, ஆண்டிபட்டி, சாந்தப்படி, வேலம்பாடி, கோவிலூர், நாகம்பள்ளி உள்ளிட்ட ஊராட்சி பகுதியில் 5 ஏக்கருக்கும் மேலாக அதிக வருவாயை அளிக்கும் பணப் பயிரான சூரிய காந்தியை  விவசாயிகள்  பயிரிட்டுள்ளனர். 90 நாட்கள் மகசூல் பயிரான சூரியாகாந்தி தற்பொழுது நன்கு வளர்ந்து பால்மணி பிடித்துள்ளது. இதனை நன்கு பாதுகாத்தால்தான் முழு அளவில் அறுவடை செய்து விவசாயிகள் லாபம் பார்க்க முடியும். இந்நிலையில் சூரியகாந்தி பயிரிட்டடுள்ள விவசாயிகளுக்கு தற்பொது பெரும் தலைவலியாக இருப்பது கிளிகள்தான். சூரியகாந்தி பயிரில் நன்கு திரண்டுள்ள பால்மணிகளை கொத்தி தின்று விடுகின்றன. இதனால் சூரியகாந்தி பயிர் நாசமாகிறது. கூட்டம் கூட்டமாக வரும் கிளிகளை துரத்துவது விவசாயிகளுக்கு பெரும் சிரமமாக உள்ளது. கிளிகளை விரட்டுவதற்கென்றே தனியாக கூலியாட்களை அமர்த்த வேண்டிய சூல் நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் செலவாகின்து. அறுவடை வரை கிளிகளை விரட்டிக்க வேண்டியுள்ளது. அப்போதுதான் உரிய முறையில் லாபம் பெறமுடியும் என்று அரவக்குறிச்சி பகுதியில் சூரியகாந்தி பயிரிட்டுள்ள விவசாயிகள் கிளிகளின் தொல்லையால் நஷ்டம் எற்படும் என்ற கவலையில் உள்ளனர்.

Tags : area ,Aravakurichi ,
× RELATED நெல்லை மாநகர பகுதியில் சாலையில்...