×

புறநகர் பகுதிகளில் கைவரிசை காட்டியவர் போலீஸ் மீது ஸ்பிரே அடித்து தப்பிய கொள்ளையன் கைது: 70 சவரன் நகைகள் மீட்பு

சென்னை, பிப். 8: வாகன சோதனை செய்த போலீஸ்காரர் மீது பெப்பர் ஸ்பிரே அடித்துவிட்டு  தப்பிய பிரபல கொள்ளையனை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து 70 சவரன் நகைகளை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். மடிப்பாக்கம்-ஆதம்பாக்கம் காவல் நிலைய சந்திப்பு பகுதியில் கடந்த 1ம் தேதி தனிப்படை தலைமை காவலர் விஜயகாந்த் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே காரில் வந்த ஒருவரை நிறுத்தி ஆவணங்களை கேட்டுள்ளார்.
அப்போது தலைமை காவலரின் முகத்தில் அந்த நபர் பெப்பர் ஸ்பிரே அடித்துவிட்டு, அங்கிருந்து காரில் தப்பினார். உடனே போலீசார் காரில் தப்பிய மர்ம நபரை விரட்டி சென்று சுற்றிவளைத்து பிடித்தனர்.விசாரணையில் திருப்பூரை சேர்ந்த பிரபல ரவுடி சுந்தர் (எ) புறா சுந்தர் (34) என்பதும், திருப்பூர், கோவை பகுதிகளில் கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகளில் தொடர்பு உள்ளவர் என்பதும் தெரிந்தது. பிடிபட்ட புறா சுந்தர் சென்னை, சைதாப்பேட்டையில் தங்கியிருந்து புறநகர் பகுதிகளில் வீட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.இதையடுத்து புறா சுந்தரை கோவைக்கு கொண்டு சென்று, அங்குள்ள கடைகளில் சுந்தர் அடமானம் வைத்திருந்த 70 சவரன் நகைகளை ேபாலீசார் மீட்டனர். இது தொடர்பாக அடகு கடைக்காரர்களான சதீஷ், பிரபாகரன் ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து, தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags : Survivor ,suburbs ,
× RELATED சசிகலா ஒரு வெற்று பேப்பர்: ஜெயக்குமார் கிண்டல்