×

நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் முதன்மை பயிற்சியாளர்களுக்கு வகுப்பு விளக்க கூட்டம்

காஞ்சிபுரம், பிப்.8: நாடாளுமன்றத் தேர்தல் முன்னேற்பாடு முதன்மை பயிற்சியாளர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு கூட்டம் நடந்தது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முன்னேற்பாடாக முதன்மை பயிற்சியாளர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கி, பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார்.இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக முதன்மை பயிற்சியாளர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு 110 அரசுப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு  நேற்று நடந்தது.அந்த அலுவலர்களுக்கு யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் ஈவிஎம் - விவிபிஏடி இயந்திரம் தொடர்பான செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மாநில அளவில் முதன்மை பயிற்சியாளர்களாக பயிற்சி பெற்ற மாவட்ட அலுவலர்கள் குணசேகரன், ராஜந்திரன், அருண் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, சப் கலெக்டர் சரவணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ரவிசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டார்.

Tags : Election Campaign ,Trainers ,
× RELATED நாகையில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் மீண்டும் கைது