×

நிப்ட்-டீ கல்லுாரியில் தொழில்நுட்ப கருத்தரங்கு

திருப்பூர், பிப்.7: திருப்பூர்  முதலிபாளையம் நிப்ட்-டீ பின்னலாடை வடிவமைப்புக் கல்லூரியில் பிஎஸ்சி..ஜிடிபி துறை சார்பில்  ஜவுளி துறையில் எற்பட்டுள்ள நவீன தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம் நடந்தது.
 கல்லுாரி வளாகத்தில் நடந்த கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் முனைவர். பாலகிருஷ்ணன் தலைமை வகித்து  தொடங்கி வைத்தார்.  துணை முதல்வர் முனைவர். தயாளராஜன் முன்னிலை வகித்தார்.  ஜிடிபி துறைத்தலைவர் உதவிப் பேராசிரியை ஜெயந்தி வரவேற்றார். இதில், கோவை, பிஎஸ்ஜி தொழில்நுட்ட கல்லூரியின் பேஷன் டிசைன் துறையின் ஆராய்ச்சி வழிகாட்டி கோபாலகிருஷ்ணன் துரைசாமி சிறப்புரையில்  நூலிழையின் பண்புகள், அதன் வகைகள், எந்தெந்த ஆடைகளுக்கு எந்தெந்த வகையான நூல்களை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும், பல்வேறு இடங்களில் பயன்படும் ஆடை வகைகளையும், அதை தயாரிக்கப் பயன்படும் நூலிழை வகைகளைப் பற்றியும் காணொலி காட்சி வாயிலாக விளப்பட்டது.
 ஸ்பைடர் சில்க் எனப்படும் பூச்சிகளிலிருந்து உருவாக்கப்படும் திறன்மிக்க நூலிழை குறித்தும் அதன் பயன்பாடுகள் குறித்தும், 2021ஆம் ஆண்டிற்குள் பயன்பாட்டுக்கு வர இருக்கும் திறன் மிகுந்த நூலிழை பயன்பாடுகள் பற்றி குறிப்பிட்டார்.  குறிப்பாக இவ்வகை நூலிழைகள் மருத்துவம், போக்குவரத்து, பாதுகாப்பு துறைக்கான ஜவுளிகள் ஆகியவை தயாரிப்பதற்கு பயன்பட இருப்பதன் முக்கியத்துவத்தையும் எளிதில் மக்கிப்போகும் பாலிஸ்டர் மற்றும் நைலான் உற்பத்தி மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றி மாணவர்களுக்குப் புரியும் வகையில் எடுத்துரைத்தார்.   தொடர்ந்து துறை சார்ந்த மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். ஜிடிபி துறை உதவிப் பேராசிரியை ஆனந்தி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் துறை சார்ந்த உதவிப்பேராசிரியர்கள் சதீஸ்குமார், முருகன், கீதாராணி, சுசி,பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Seminar ,Nift-De College ,
× RELATED ஜி.கே.என்.எம் மருத்துவமனையில்...