×

உரம் தயாரிக்கும் பணிக்கு மயானத்தை மாநகராட்சி பயன்படுத்த எதிர்ப்பு

மதுரை, பிப். 7:  உரம் தயாரிக்கும் பணிக்கு மயானத்தை மாநகராட்சி பயன்படுத்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மதுரை மாநகராட்சி 27வது வார்டுக்கு உட்பட்ட மருதங்குளத்தில் பொது மயானம் உள்ளது. இங்கு மருதங்குளம், ஜவகர்லால்புரம், ராசிகார்டன், சூர்யாநகர், மீனாட்சிநகர், தாய்மூகாம்பிகை நகர், பிடபிள்யூடி காலனி, விநாயகாநகர், ஜெஆர் கார்டன் மற்றும் சாமிதோப்பு  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசதிக்கும் மக்கள், மருதங்குளம் மயானத்தில் தான் எரிப்பதற்கும் புதைப்பதற்கும் காலம் காலமாக பயன்படுத்தி வருகின்றனர்.  மாநகராட்சியின் கீழ் வந்தாலும் விரிவாக்கப் பகுதியாகவே இருப்பதால், மயானம் மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் இதைப்பற்றி கவலைப்படாமல் மாநகராட்சி, மருதங்குளம் மயானத்தை உரம் தயாரிக்கப்பயன்படுத்துகிறது.

உரம் தயாரிப்பதற்காக மட்கும் மற்றும் மட்காத குப்பைகளை மயானத்தில் கொண்டு வந்து கொட்ட உள்ளனர். அப்படி மயானத்தை உரம் தயாரிக்கப்பயன்படுத்தக்கூடாது என இப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஆழ்வார் கூறுகையில், ‘மயானமாகவே இதனை பயன்படுத்த வேண்டும். மாநகராட்சியாக மாறினாலும் கிராமப்புறமாகவே இந்த பகுதிகள் உள்ளன. இவர்களுக்கு மயானம் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. மருதுங்குளம் மயானத்தில் உரம் தயாரிப்பதற்காக குழிகளை மாநகராட்சி தோண்டியுள்ளது. இதனை நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என்றார்.

Tags : municipality ,cemetery ,production ,
× RELATED திருப்பத்தூர் நகராட்சியில் பரபரப்பு...