×

இலவச இருதய பரிசோதனை முகாம்

திருத்தணி,  பிப். 7: திருத்தணி அடுத்த பீரகுப்பம் கிராமத்தில்  மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு அரசு ஆரம்ப சுகாதார மையமும்,  தனியார் மருத்துவமனையும் இணைந்து குழந்தைகளுக்கான இருதய பரிசோதனை முகாம் மற்றும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று நடத்தியது.  மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். திருத்தணி வட்டார மருத்துவ அலுவலர் தினேஷ் முன்னிலை வகித்தார்.  சட்டமன்ற உறுப்பினர் பி.எம்.நரசிம்மன் முகாமை தொடங்கி வைத்தார்.முன்னதாக, டாக்டர் கபில் அனைவரையும் வரவேற்றார்,  டாக்டர்கள் ரவி அகர்வால் ராய், வர்கீஸ் விமலா, சந்திப் மெஹந்தி, துணை சுகாதார இயக்குனரின்  நேர்முக உதவியாளர் அந்தோணி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Cardiology Testing Camp ,
× RELATED துறையூரில் இலவச இருதய பரிசோதனை முகாம்