×

இயந்திர கோளாறுக்கு முற்றுப்புள்ளி சர்க்கரை ஆலை நவீன மயமாக்கல் திட்டம் இழுத்தடிப்பு போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு

பெரம்பலூர்,பிப்.7: பெரம்பலூரில் சர்க்கரை ஆலை நவீன மயமாக்கல் திட்டத்தை இழுத்தடிப்பதால் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா,  எறையூர் ஊராட்சியில் கடந்த 1978ம்ஆண்டு ஜவஹர்லால் நேரு பொதுத்துறை சர்க்கரை  ஆலை தொடங் கப்பட்டது. இந்த சர்க்கரைஆலையில் விவசாயிகளும்,  தமிழக அரசும் இணைந்து பங்குதாரர்களாக உள்ளனர். வழக்கமாக 3லட்சம் டன் அரவைத்  திறனுடன் தொடங்கப்பட்ட இந்த சர்க் கரை ஆலையின் 41வது அரவைப்பருவம்  நடப்பாண்டு நடந்து வருகிறது.30 ஆண்டுகளுக்கு பிறகு ஆலையின்  இயந்திரங்கள் வெகுவாக பழுதடைந்து பெரு நஷ்டத்தில் இயங்கி, தனியாரிடம்  தாரைவார்க்கும் சூழல் ஏற்பட்டதால் அவற்றை மாற்றி ஆலையை நவீனப்படுத்தவும்,  ஆலையின் தேவைக் கேற்ப இணைமின் உற்பத்தி திட்டத்தை ஆலையில் தொடங்கவும்  கடந்த 2009ம் ஆண்டு திமுக ஆட்சியில் திட்ட மிடப்பட்டு 2010ம் ஆண்டு அதற்கான  டெண்டர் விடப்பட்டு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  ஆனால் அடுத்து வந்த அதிமுக அரசால் இந்தத்திட்டம் ஆமை வேகத்தில் கூட  நடக்காமல் அப்படியே முடங்கி கிடந்தது.பழுதான இயந்திரங்களுக்கு  மாற்றாக ஆலை நிர்வாகத்தால் வாங்கப்பட்ட தரமற்ற இயந்திரங்களால் தொடர்ந்து  ஆலையின் அரவைப் பணிகள் ஆண்டுக்கு ஆண்டு தடைபட்டு ஆலைக்கு வெட்டப்பட்ட  கரும்புகள் தாமதமாக அரைவைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதும், அரவை தடைபட்டு  வெளிஆலைகளுக்கு அனுப்பி வைப்பதுவும், அதனால் கரும்பு எடை குறைவது என பல்வேறு  சிரம ங்களை விவசாயிகள் சந்திக்க வேண்டியிருந்தது.

குறிப்பாக கடந்த  2016ம் ஆண்டு அரவைப்பணி தொடங்கிய 30 நாட்களில் 9முறை இயந்திரக் கோளாறு  காரணமாக அரவைப்பணிகள் தடைபட்டது. அதோடு குழாய்கள் வெடித்து  கரும்புச்சாறுகள் ஆறாக வெளியேற்றப்பட்டதும், இயந்திரக் கோளாறுகளால்  உற்பத்தித்திறன் பாதிக்கப்பட்டதும் ஆலை நிர்வாகத்தின் மெத் தனப் போக்குகளால்  அரங்கேறியது. இந்நிலையில் ஏற்கனவே பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு  கடந்த 2015-2016 மற் றும் 2016-2017ஆகிய 2ஆண்டுகளில்  வெட்டியனுப்பிய கரும்புக்கான பாக்கித் தொகை ரூ31.53கோடியை ஆலை நிர்வாகம்  பெற்றுத்தராமல் இழுத்தடித்து வந்த சூழலில், பொறுத்து, பொறுத்து பார்த்த  கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் திமுக ஆட்சியில் அறிவித்து டெண்டர் விடப்பட்ட  இணைமின் உற்பத்தித்திட்டம், ஆலை நவீனமயமாக்கல் திட்டம் தொடங்கி,  பயன்பாட்டிற்கு வருவது எப்போது என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து  கேள்வியெழும்பும் நிலைக்கு சென்றது.
அதோடு அரவைப் பணிக்கான பங்குப்  பேரவைக் கூட்டத்திலும் இயந்திர கோளாறுகளை சரிசெய்யாமல் அரவைப் பணிகளை  தொடங்க விடமாட்டோம் என வலியுறுத்தியதாலும், வேறுவழியின்றி ஆலைநிர்வாகம்  இணைமின் உற்பத்தித் திட்டத்தையும், ஆலை நவீனமயமாக்கல் திட்டத்தையும் ஆரம்பித்து செயல்படு த்தத் தொடங்கியது.இருந்தும் பயன்பாட்டிற்கு வருவது  எப்போது என்ற கேள்விகளுக்கு டிசம்பர் இறுதிக்குள், ஜனவரி முதல்வாரத்தில்,  பொங்கல் தினதன்று என ஆலை நிர்வாகம் அடிக்கடி மழுப்பலான பதில்களை  அளித்து வந்தது. பிப்ரவரி இறுதிக் குள்ளாவது பயன்பாட்டிற்கு வராவிட்டால்  விவசாயிகள் சங்கத்தினர் இறுதி க்கட்ட போராட்டத்தை நடத்தலாம் என  முடிவுசெய்து வருகின்றனர்.

Tags :
× RELATED ஆந்திராவில் இருந்து புதுக்கோட்டைக்கு 1500 டன் பச்சரிசி மூட்டைகள் வந்தது