×

துகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறிக்கை வழங்க தாமதம் இழப்பீடுக்கு விண்ணப்பிக்க உறவினர்கள் கடும் அவதி

புதுக்கோட்டை, பிப்.7:  புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விபத்தில்  சிக்கி உயிரிழப்பவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை தாமத மாக வழங்கப்படுவதால்,  இறந்தவர்களின் உறவினர்கள் இழப்பீடு பெற உரிய நேரத்தில் விண்ணப்பிக்க  முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைபவர்களையும், தற்கொலை முயற்சி செய்பவர்களையும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, புதுக்கோட்டை  அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச் சைக்காக அனுப்பி  வைக்கின்றனர். அவ்வாறு மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்படும் நிலையில், அவர் மருத்துவ மனைக்கு  செல்லும் வழியில் அல்லது மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக் காமலோ  இறந்துவிடும் பட்சத்தில், இறந்து விடுபவர்களின் சடலங்களை புதுக் கோட்டை அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.  இங்கு மாதத்திற்கு சுமார் 50 முதல் 90 பேர் வரை பிரேத பரிசோதனை நடக் கிறது. விபத்தில்  சிக்கி உயிரிழப்பவர்களுக்கு, இழப்பீட்டு தொகை பெற விண்ணப் பிக்கும் போது விண்ணப்பத்துடன் ஆதார்கார்டு, ரேசன்கார்டு, முதல் தகவல் அறிக்கை நகல்,  பிரேத பரிசோதனை நகல் போன்றவற்றை இணைக்க வேண்டும். காவல்நிலையத்தின் முதல்  தகவல் அறிக்கை உள்ளிட்டவைகளை சில நாட்களில் பெறும் இறந்தவரின் உறவினர்கள்  பிரேதப்பரிசோதனை அறிக்கையை உடனடி யாக பெற முடியவில்லை. தாலுகா  மருத்துவமனைகளில் பிரேதப் பரிசோதனை நடக்கும் நிலையில், அங்கு சுமார் 7  நாட்கள் முதல் 10 நாட்களுக்கு பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்து  விடுகிறது.

Tags : relatives ,Government Medical College Hospital ,
× RELATED விஷச்சாராயம் சம்பவம்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 20 பேர் டிஸ்சார்ஜ்