×

மணமேல்குடி அருகே டிராக்டர் மோதி பெண் பலி

மணமேல்குடி, பிப். 7: மணமேல்குடி அருகே டிராக்டர் மோதி பெண் பலியானார்.மணமேல்குடி  அடுத்த அத்தாணியை சேர்ந்தவர் கருப்பையா மனைவி சிவபாக்கியம் (48).  இவர் நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள ஒரு குளத்தில் குளித்து விட்டு  அத்தாணி சாலையில் நடந்து சென்றார். அப்போது ஏகப்பெருமகளூரில் இருந்து வந்த டிராக்டர் சிவபாக்கியம் மீது மோதியது. இதில்  தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே சிவபாக்கியம் பலியானார். தகவல் கிடைத்ததும்  மணமேல்குடி சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் விரைந்து  சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து டிராக்டர் டிரைவரான அத்தாணியை சேர்ந்த சுரேஷ் என்பவரை கைது செய்தனர்.

Tags : Manamkuldi ,
× RELATED மணமேல்குடி பகுதியில் கடும்...