×

வாங்கல் சாலை குப்பை கிடங்கில் காற்றில் உடையும் பிளாஸ்டிக் தடுப்புகள்

கரூர், பிப்.7: குப்பை கிடங்கில் உடைந்த பிளாஸ்டிக் தடுப்புகளை சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் வாங்கல் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. கரூர் நகரம் முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்படுகிறது. குப்பை கிடங்கில் உள்ள குப்பைகள் காற்றில் பறப்பதை தவிர்க்கும் வகையில் பெரிய பிளாஸ்டிக் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. இவை காற்றில் உடைந்து சேதம் அடைந்துள்ளன. மேலும் புதிய தடுப்புகள் வைக்காததால் குப்பைகள் காற்றில் பறப்பது மட்டுமின்றி, தீவைத்து எரிக்கும்போது புகை மண்டலமும் அதிக அளவில் வெளியேறி வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். உடைந்த பிளாஸ்டிக் தடுப்புகளை சீரமைத்து வைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : garage warehouse warehouse ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு