வேலாயுதம்பாளையத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

கரூர், பிப்.7:  வேலாயுதம்பாளையத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கரூர் வேலாயுதம்பாளையம் காவல்துறை சார்பில் ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. எஸ்ஐ நெடுஞ்செழியன் துவக்கி வைத்தார்.  நடையனூரில் அரங்கசாமி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் கலந்துகொண்டு பதாகைகளுடன் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டன. பஸ்களில் படிக்கட்டு பயணம் செய்யக்கூடாது. வாகனம் ஓட்டுபவர்கள் சீட்பெல்ட் அணிய வேண்டும்.சரக்கு வாகனத்தில் அதிக பாரம் ஏற்றக்கூடாது. காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது. இரவு நேரங்களில் கனரக வாகனங்களை பாதுகாப்பில்லாத இடங்களில் நிறுத்தக்கூடாது. குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது என பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

Related Stories:

>