×

இந்து சக்தி சேனா மக்கள் இயக்க நிர்வாகி கைது சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக

வேலூர், பிப்.7: சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய இந்து சக்தி சேனா அமைப்பை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.வேலூர் தொரப்பாடியை சேர்ந்தவர் ராமகோபாலன்(50). இந்து சக்தி சேனா மக்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது முகநூல் பக்கத்தில் வேற்று மதத்தினருக்கு எதிராக அவதூறு கருத்துகள் பரப்பியதாக திருச்சி பொன்மலை போலீஸ் நிலையத்தில் சிலர் புகார் செய்தனர். அதன்பேரில், பொன்மலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலூர் வந்த திருச்சி பொன்மலை போலீசார் உள்ளூர் போலீசார் உதவியுடன், அன்று இரவு 11.30 மணிக்கு ராமகோபாலன் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்து திருச்சிக்கு அழைத்து சென்றனர்.

Tags : Chief Operating Officer ,Hindu Power Force Sena ,
× RELATED தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை...