×

நஷ்டஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி வேலூர் கோர்ட் நடவடிக்கை விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளிக்கு

வேலூர், பிப்.7: விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளிக்கு நஷ்டஈடு வழங்காத அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். ேவலூர் ெகாணவட்டத்தை சேர்ந்தவர் அம்ஜத்(42). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி வேலைக்கு சென்று விட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். முள்ளிப்பாளையம் அருகே வந்த போது எதிரே வந்த அரசு பஸ் பைக் மீது மோதியது. இதில் அம்ஜத் படுகாயமடைந்தார். இதில் அவரது கால்கள் இரண்டும் பாதிக்கப்பட்டது. விபத்தால் பாதிக்கப்பட்ட தனக்கு அரசு போக்குவரத்துக்கழகம் ₹14 லட்சம் நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று கோரி வேலூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அம்ஜத் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு அம்ஜத்துக்கு ₹4.67 லட்சம் வட்டியுடன் வழங்குமாறு அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு உத்தரவிட்டது. ஆனால் நஷ்டஈடு வழங்காததால், மீண்டும் அம்ஜத் இதுதொடர்பாக கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விபத்தால் பாதிக்கப்பட்ட அம்ஜத்துக்கு நஷ்டஈட்டை வழங்காத அரசு போக்குவரத்துக்கழக பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில், கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு பஸ்சை ஜப்தி செய்ய சென்ற போது, உரிய நஷ்டஈட்டை விரைவில் வழங்குவதாக அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.ஆனால், இதுவரை உரிய நஷ்டஈட்டை வழங்காததால் நேற்று மதியம் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் நின்றிருந்த சென்னை செல்லும் அரசு பஸ், நீதிமன்ற உத்தரவின்பேரில் ஜப்தி செய்யப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : court action ,Japthi Vellore ,
× RELATED 6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த...