×

தோவாளை கணவன், மனைவி கொலையில் போலீஸ் தேடிய உறவினர், கூலிப்படையினர் 4 பேர் கோர்ட்டில் சரண் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

ஆரல்வாய்மொழி,  பிப்.7 : தோவாளையில் நடந்த கணவன், மனைவி கொலை வழக்கில் ஒரு வாரத்துக்கு  பின், பெண்ணின் சகோதரர் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 4 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.
குமரி  மாவட்டம் தோவாளை கிருஷ்ணன்புதூர் அம்மன் கோயில் தெருவை சேர்ந்த முத்து  என்ற மணிகண்டன் (42), அவரது மனைவி கல்யாணி (40) ஆகியோர் கடந்த 31ம் தேதி  மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டனர். இந்த இரட்டை கொலை தொடர்பாக  ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலைக்கு முக்கிய  காரணமாக கருதப்படும் கல்யாணியின் சகோதரர் சுடலையாண்டி தொடர்ந்து தலைமறைவாக  இருந்து வருகிறார். இவர் மூலம் அனந்தபத்மநாபபுரத்தை சேர்ந்த ராஜ்குமார்  தலைமையில் கூலிப்படை உருவாக்கப்பட்டு இந்த கொலைகள் நடந்துள்ளது தெரிய  வந்தது. எனவே சுடலையாண்டி மற்றும் ராஜ்குமாரை போலீசார் தீவிரமாக தேடினர்.  இதில் ராஜ்குமாரின் கூட்டாளியான நாகர்கோவிலை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர்  கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். ஆனால் சுடலையாண்டி,  ராஜ்குமார் கிடைக்க வில்லை.இந்த நிலையில் ராஜ்குமார் (32) மற்றும்  அனந்தபத்மநாபபுரத்ைத சேர்ந்த அய்யப்பன் (25), ராஜா (35), கன்னியாகுமரி  சுனாமி காலனியை சேர்ந்த சகாய ஷாஜி ெஜனிஸ் (24) ஆகியோர் , நெல்லை ஜூடிசியல்  மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 1ல் சரண் அடைந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி  ராமதாஸ் இவர்கள் நால்வரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதை  தொடர்ந்து இவர்கள் நால்வரும், பாளை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  போலீஸ் தேடி வந்த நிலையில் ராஜ்குமார் உள்ளிட்ட நால்வரும் நீதிமன்றத்தில்  சரண் அடைந்த தகவல் அறிந்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் அங்கு விரைந்தனர்.  இவர்கள் நால்வரையும் நீதிமன்ற உத்தரவுப்படி காவலில் எடுத்து விசாரணை நடத்த  முடிவு செய்தனர்.

ஏற்கனவே சுடலையாண்டியுடன் தொடர்பில் இருந்த பெண்  ஒருவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். நேற்று முன் தினம் இரவு முதல்  விடிய விடிய விசாரணை நடந்தது. இதில் சுடலையாண்டி குறித்து முக்கிய தகவல்களை  அந்த பெண் கூறி உள்ளதாக தெரிகிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து  வருகிறது. இந்த வழக்கில் கல்யாணியின் சகோதரர் சுடலையாண்டியை தான்  முக்கிய குற்றவாளியாக போலீசார் கருதுகிறார்கள். நில பிரச்னையில் தனது தங்கை  மற்றும் அவரது கணவரை கூலிப்படை ஏவி சுடலையாண்டி கொன்றதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று அவர் தாம்பரம் நீதிமன்றத்தி–்ல சரண் அடைந்துள்ளார். அவர் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தினால் கொலைக்கான முழு காரணமும் தெரிய வரும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Tags : victim ,cousin ,court ,mercenaries ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள அனைத்து...