×

தூத்துக்குடி கலெக்டர் ஆபிசில் போலீஸ்காரர் மனைவி தீக்குளிக்க முயற்சி

தூத்துக்குடி, பிப். 7: கடந்த இரு மாதங்களுக்கு முன் தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் நாராயணன் என்ற விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதன்சுவடு மறைவதற்குள் நேற்று மதியம் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு  கையில் குழந்தையுடன் வந்த இளம்பெண் அவசரமாக உள்ளே செல்ல முயன்றார். பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் அவரை சோதனையிட்டபோது பையில் மண்ணெண்ணெய் பாட்டில் வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் அதை பறிமுதல் செய்து நடத்திய விசாரணையில்,  அவர் கொல்லங்கிணறைச் சேர்ந்த அருண்பிரகாஷ் மனைவி செல்வராணி(29) என்பதும், தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளதும் தெரியவந்தது.
காவல்துறையில் பணியாற்றி வந்த அருண்பிரகாஷ் கடந்த இரு ஆண்டுகளாக பணிக்கு செல்லாமல் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே கடம்பூர்-புளியம்பட்டி பகுதியில் சாலை சீரமைப்பு பணி நடந்துவரும் நிலையில் அதுகுறித்த எச்சரிக்கை பலகை வைக்கப்படாததால் அங்கு சாலை பணிக்காக தோண்டிய பள்ளத்தில் கடந்த 2ம்தேதி பைக்கில் சென்ற அருண்பிரகாஷ் தவறி விழுந்து படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.மருத்துவ உதவி மற்றும் நிவாரணம் கோரி ெசல்வராணி சென்றபோது, சாலை கான்ட்ராக்டர் தரப்பினர் அவதூறாகப் பேசி மிரட்டியுள்ளனர். இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் மனமுடைந்த செல்வராணி தற்கொலை செய்யும் நோக்கத்தில் கலெக்டர் அலுவலகம் வந்தது விசாரணையில் தெரியவந்தது.  இதையடுத்து மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்த போலீசார் அவரை அருகேயுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

Tags : collector ,Thoothukudi ,office ,policeman ,
× RELATED தூத்துக்குடியில் தேர்தல் விதி மீறுபவர்கள் மீது நடவடிக்கை