×

போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

திருப்பூர், பிப். 6:  திருப்பூரில், சம்பளம் வழங்காததை கண்டித்து அனைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் பணிமனை முன்பு நேற்று தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   கோவை மண்டலத்திற்குட்பட்ட கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட பகுதியில் பணிமனையில் பணிபுரியும் டெக்னிசியன்கள், அலுவலக ஊழியர்கள் கடந்த ஜனவரி மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படவில்லை.
இதில், திருப்பூர் கோட்டத்தில் 2 பணிமனைகளிலும் சேர்த்து, 150 தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முழுமையாக சம்பளம் வழங்காமல் பிரித்து வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, நடப்பாண்டு ஜனவரி மாதத்திற்கான சம்பளம் வழங்க தாமதம் ஏற்பட்டத்தை கண்டித்து கடந்த பிப்.1ம் தேதி பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
   மேலும், சம்பளம் வழங்க கால தாமதம் ஏற்பட்டு வருவதை கண்டித்து நேற்று முன்தினம் திருப்பூர் முதலாம் பணிமனை முன்பு தட்டு ஏந்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். அதனையடுத்து, 4ம் தேதி சம்பளம் வழக்கப்படும் என கிளை மேலாளர் கூறியதால், போராட்டத்தை தள்ளி வைத்தனர்.
இந்நிலையில் தற்போது 5ம் தேதி ஆகியும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை.
இதனை கண்டித்து நேற்று திருப்பூர், காங்கயம் ரோட்டில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 போராட்டத்திற்கு சிஐடியு., போக்குவரத்து தொழிலாளர் சங்க கோவை மண்டல பொது செயலாளர் செல்லத்துரை தலைமை வகித்தார். இதில் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Traffic workers ,waiter ,
× RELATED பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய தாசில்தார் உட்பட 2 பேர் கைது