×

ரண்ணிமேடு ரயில் நிலையத்தில் ரயில்வே பொது மேலாளர் ஆய்வு

குன்னூர், பிப். 6: குன்னூர் அருகே உள்ள ரண்ணிமேடு ரயில் நிலையம் புது பொழிவுடன் தயாராகி வருகிறது. இதனை தென்னக ரயில்வே பொது மேலாளர் குல்ஷேத்ரா நேற்று ஆய்வு செய்தார்.
 மேட்டுப்பாளையம்த்தில் இருந்து ஊட்டி வரை மலை ரயில் இயப்படுகிறது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த மலைரயிலில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளின் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைக்காக குன்னூரில் உள்ள ரண்ணிமேடு ரயில் நிலையத்தில் மலைரயில் நிறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த ரயில் நிலையம் மூடப்பட்டது. இதை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
 இதைத்தொடர்ந்து ரண்ணிமேடு ரயில் நிலையம் புதுப்பிக்கும் பணி  கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கியது.
இப்பணிகளை பார்வையிட தென்னக ரயில்வே ெபாது மேலாளர் குல்ஷேத்ரா மற்றும் சேலம் கோட்ட பொது மேலாளர் சுப்பாராவ் ஆகியோர் நேற்று சிறப்பு ரயில் மூலம் ரண்ணிமேடு ரயில்நிலையத்திற்கு வந்தனர்.தொடர்ந்து ரயில் நிலையத்தில் நடக்கும் பணிகளை ஆய்வு செய்தனர்.
 இதைத்தொடர்ந்து தென்னக ரயில்வே பொது மேலாளர் குல்ஷேத்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரண்ணிமேடு ரயில் நிலையம் புதுப்பொழிவுடன் தயார் செய்யப்பட்டு வருகிறது. கல்லாறு-ஊட்டி வரை உள்ள ரயில் நிலையங்களில் கழிப்பறை வசதிகள் செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் மலை ரயிலுக்காக 17 புதிய பெட்டிகள் வாங்கப்பட்டுள்ளன அதில் 13 பெட்டிகள் தயார் நிலையில் உள்ளது. விரைவில் இது மலைரயிலில் இணைக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Railway General Manager Inspectorate ,Rannemedu Railway Station ,
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி