மகளிர் விடுதிகளை பதிவு செய்ய அழைப்பு

ஊட்டி, பிப். 6: நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் தனியார் பெண்கள் விடுதி மற்றும் முதியோர் இல்லங்களை பதிவு செய்து கொள்ள மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.   
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வௌியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது: நீலகிரி மாவட்டத்தில் தனியாரால் நடத்தப்படும் பணிபுரியும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்கியுள்ள பெண்கள் விடுதி மற்றும் முதியோர் இல்லங்கள் சட்டப்படி முறையாக மாவட்ட கலெக்டரிடம் பதிவு செய்து நடத்தப்பட வேண்டும். எனவே இதுநாள் வரையில் முறையாக பதிவு செய்யப்படாத  மகளிர் விடுதி மற்றும் முதியோர் இல்லங்கள் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் வரும் 15ம் தேதிக்குள் பதிவு செய்திட வேண்டும்.   இவ்வாறு பதிவு செய்யப்படாத விடுதிகள் மற்றும் முதியோர் இல்லங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம், கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகம், பிங்கர்போஸ்டி ஊட்டி என்ற முகவரில் நேரில் அணுகலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

Tags : hostels ,
× RELATED முறைகேடுகளை தவிர்க்க ஏற்பாடு மருத்துவ மாணவர்களின் பெருவிரல் ரேகை பதிவு