ராஜீவ் கொலை வழக்கில் ைகதான 7 பேரை விடுதலை செய்ய கோரி தெருமுனை கூட்டம்

ஈரோடு, பிப்.6:  ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய கோரி தமிழ்நாடு திராவிடர் கழகம் சார்பில் நீதி கேட்டு மக்கள் சந்திப்பு இயக்கம் துவங்கப்பட்டது. இந்த இயக்கத்தின் துவக்க விழா, தெருமுனை கூட்டம் பொள்ளாச்சியில் கடந்த 3ம் தேதி துவங்கியது. அதன்பின், பல்வேறு இடங்களில் தெருமுனை கூட்டம் நடத்தப்பட்டது. அதன்ஒருபகுதியாக, ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் நேற்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில், தமிழ்நாடு திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் நாகராசன் தலைமை வகித்தார். தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் குமரகுருபரன் முன்னிலை வகித்தார். 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்கள் தொடர்ந்து சிறைவாசம் அனுபவிப்பது நியாயம் தானா? அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேசினர். இக் கூட்டத்தில், திமுக இலக்கிய அணி வீரமணி ஜெயக்குமார், திராவிடர் விடுதலைகழகம் ரத்தினசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

× RELATED லால்குடி அருகே டாஸ்மாக் காவலாளி கொலை வழக்கில் 3 வாலிபர் கைது