புதுமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா

கொடுமுடி, பிப்.6:  ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள பிரசித்தி பெற்ற புதுமாரியம்மன் கோயில் 81வது ஆண்டு பொங்கல் விழா கடந்த மாதம் 29ம் தேதி கம்பம் போடுதல், பூச்சாட்டுடன் துவங்கியது.விழாவின் ஒரு பகுதியாக, ேநற்று மாலை 60 அடி அக்னிகுண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினர். இதையடுத்து, இன்று (6 ம் தேதி) பொங்கல் விழாவும், இரவு 8 மணிக்கு மகாபூஜையும் நடக்கிறது. 7ம் தேதி  அன்னதானமும், கம்பம் காவிரி் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சியும், 8ம் தேதி காலை 10 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

× RELATED காந்திபுரம் சக்தி மாரியம்மன் கோயில் குண்டம் விழா