×

சென்னிமலையில் வணிகர் சங்க கூட்டம்

சென்னிமலை, பிப்.6: சென்னிமலையில் அனைத்து வணிகர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.  சங்க செயலாளர் எம்.ஏ.அன்பழகன் தலைமை வகித்தார். முன்னதாக, மறைந்த முன்னாள் தலைவர் வி.என்.சாமிநாதனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில், சென்னிமலை அனைத்து வணிகர்கள் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வது குறித்தும், சென்னிமலை பேரூராட்சி விதித்துள்ள 100 சதவீத சொத்து வரிக்கு கண்டனம் தெரிவித்தும், வரி விதிப்பை மறு பரிசீலனை செய்ய கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக் கூட்டத்தில், சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், வணிகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Tags : meeting ,Merchant Association ,Chennimalai ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...