×

தேனி விவசாயிகள் மகிழ்ச்சி ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் சம்பளம் தேனி மாநாட்டில் வலியுறுத்தல்

தேனி, பிப். 3: தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் தேனி மாவட்ட மைய மாநாடு தேனி அருகே வீரபாண்டியில் நடந்தது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், ஷாகுல்ஹமீது, மாவட்ட துணைத் தலைவர் முருகன், மாவட்ட துணை செயலாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டி வரவேற்றார்.
மாநாட்டை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர்கள் சங்க மாநிலத்தலைவர் சார்லஸ்ரெங்கசாமி துவக்கி வைத்தார். தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் ஜான்போஸ்கோபிரகாஷ் மாநாட்டில் சிறப்புரையாற்றினார்.அப்போது, ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியத்தை கருவூலம் மூலமாக வழங்க வேண்டும், ஊராட்சி மேல்நிலைத்தொட்டி திறப்பாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளின் செயலாளர்கள், ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், மேல்நிலைத்தொட்டி திறப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.

Tags : Treasury Secretary ,Panchayat Secretaries ,
× RELATED சீசன் தொடங்கிய நிலையில் மாங்காய்களில் நோய் தாக்குதல்: விவசாயிகள் கவலை