×

திருப்புத்தூரில் புதிய பஸ்நிலையம் அமைக்க பூமி பூஜை

திருப்புத்தூர், பிப். 3: திருப்புத்தூரில் புதிய பஸ்நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.திருப்புத்தூரில் புதிய ஸ்நிலையம் அமைக்க மூலதான மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.3.30 கோடி தொகை ஓதுக்கப்பட்டு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதையொட்டி பழைய பஸ்நிலையம் அண்ணாசிலை அருகே மாற்றப்பட்டது.இதையடுத்து பழைய பஸ் நிலையத்தில் இருந்த கட்டிடங்கள் அனைத்தும் முற்றிலுமாக இடிக்கப்பட்டது. நேற்று புதிய பஸ்நிலைய கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை காலை 11.45 மணியளவில் நடைபெற்றது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார்.

சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன், திருப்புத்தூர் தி.மு.க.சட்டமன்ற உறுப்பினர் கேஆர்.பெரி.கருப்பன் முன்னிலை வகித்தனர்.விழாவின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் பேரூராட்சித்துறை உதவி இயக்குனர் சிவகங்கை மண்டலம் ராஜா, உதவிப் பொறியாளர் சுரேஷ்குமார், செயல் அலுவலர் சண்முகம், உதவிப் பொறியாளர் பாலசுப்பிரமணியன், செயல் அலுவலர் நிர்வாகம் மங்களேஸ்வரன், ஓவர்சியர் சந்திரமோகன், துப்புரவு ஆய்வாளர் தங்கதுரை, மற்றும் திமுக சார்பில் திமுக ஒன்றிய செயலாளர் சண்முகவடிவேல், திமுக மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் கான்முகமது, உதயசண்முகம், ஆவின் சேர்மன் அசோகன், அ.தி.மு.க. நகர் செயலாளர் இப்ராம்ஷா, ஒன்றியச் செயலாளர் ராமலிங்கம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டன

Tags : bus station ,Tirupathur ,
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்