×

மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் சாதனை

அரூர், பிப்.6: தேசிய அளவிலான யோகா போட்டியில், அரூர் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவ, மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கேரள மாநிலம் பாலக்காட்டில் வைஸ்யா வித்யா பேத்தோம் கல்வி நிறுவனத்தில், தேசிய அளவிலான 13வது தென்மண்டல யோகா போட்டி நடந்தது. இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் அரூர் அருகே  கோபிநாதம்பட்டி கூட்ரோடு மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவ, மாணவிகள் வயது வாரியாக நடந்த போட்டியில் கலந்து கொண்டனர். இவர்கள் அதிக புள்ளிகளை பெற்று தேசிய அளவில் முதல் மூன்று இடத்தை பிடித்து வெற்றி பெற்றனர். வ சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் இளங்கோ, முதல்வர் லதா உன்னிகிருஷ்ணன், பள்ளி நிர்வாகிகள், யோகா பயிற்சியாளர், உடற்கல்வி ஆசிரிய, ஆசிரியைகள்  பாராட்டினர்.

Tags : Maharshi Vidhya Mandir ,
× RELATED மாவட்ட டேக்வாண்டோ போட்டியில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி