×

செஞ்சி ஊராட்சியில் இரு பள்ளிகளுக்கு ஒரே இடத்தில் சமையல்

திருவள்ளூர், பிப். 6:  திருவள்ளூர் அருகே செஞ்சி ஊராட்சியில் உள்ள இரு அரசு பள்ளிகளுக்கு, ஓரே இடத்தில் சத்துணவு தயார் செய்து,  பெண் சமையலர் சுமந்து செல்லும் அவலம் உள்ளது. வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது செஞ்சி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட செஞ்சி கிராமத்தில் தொடக்கப்பள்ளியும், அரசு உயர்நிலை பள்ளியும் உள்ளது. மேலும், ஊராட்சிக்கு உட்பட்ட ஒண்டிக்குடிசை கிராமத்தில் ஒரு துவக்கப்பள்ளி உள்ளது.  இதில், துவக்கப்பள்ளியில் உள்ள சத்துணவு அறையில், 150 மாணவர்கள் பயிலும் அரசு உயர் நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் சேர்த்து உணவு தயார் செய்யப்படுகிறது. ஆனால், எந்த வித உதவியும் இன்றி, வயதான பெண் சமையலர், கடும் வெப்பத்தின் நடுவே இந்த உணவுகளை தயாரித்து அரை கி.மீட்டர் தூரமுள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு சுமந்துச்சென்று, மாணவர்களுக்கு பரிமாறுகின்றார்.

சத்துணவை இரு கைகளால் தூக்கிச் செல்லமுடியாமல், சிறிது தூரம் நடந்துசென்ற பெண் சமையலர், அவ்வழியாக யாராவது பைக்கில் வருகிறார்களா என திரும்பி, திரும்பி பார்த்தபடி சென்றார். பின்னர் அவ்வழியாக வந்த பைக்கில் ‘’லிப்ட்’’ கேட்டு, இரு பாத்திரங்களையும் கையில் பிடித்தபடி ஏறி உட்கார்ந்துகொண்டு பள்ளி வரை சென்றார்.இவ்வாறு, பெண் சமையலர் உணவை சுமந்து செல்லும் கொடுமை,  பல ஆண்டுகளாக இக்கிராமத்தில் நிலவி வருகிறது. எனவே, 150 மாணவர்கள் கல்வி பயிலும் அரசு உயர்நிலை பள்ளியில் சத்துணவு செய்து மாணவர்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

Tags : schools ,Gingee Panchayat ,
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...