புயலால் பாதித்த இசை கலைஞர்களுக்கு கருவிகள் வழங்கும் விழா

திருத்துறைப்பூண்டி, பிப்.6: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கொக்கலாடி முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் கஜா புயலால் பாதித்த நாகை, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 20 இசைக்கலைஞர்களுக்கு செம்மை மரபு வாழ்வியல் அமைப்பு சார்பில் இசைக்கருவிகள் வழங்கும்  விழா நடைபெற்றது.
இசைக்கலைஞர்கள்சங்க திருத்துறைப்பூண்டி ஒன்றியதலைவர் சித்திரை செல்வன் தலைமை வகித்தார்.செம்மை மரபு வாழ்வியல் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் வழிகாட்டுதலின்படி கஜாபுயலில் தங்கள் வாழ்வாதாரமான இசைக்கருவிகளை இழந்த தமிழ் மரபு இசைக் கலைஞர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
தஞ்சை தமிழ்நாடு கிராமியகலைஞர்கள்சங்க செயலாளர் ராஜேந்திரன், செம்மை மரபு வாழ்வியல் அமைப்பு சார்பில் காந்திமதி, மணிமேகலைஆகியோர் 20 இசைக்கலைஞர்களுக்கு ரூ 2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான 15 தவில் மற்றும் 5  நாதஸ்வர கருவிகளை வழங்கினர்.

× RELATED திருப்புத்தூர் அருகே அம்மன் கோயிலில் பால்குட விழா