×

ரூ.12.38 கோடியில் காரைக்கால் என்ஐடி ஆய்வக கட்டுமான பணிக்கு பூமிபூஜை

காரைக்கால், பிப்.6:காரைக்கால் திருவேட்டைக்குடியில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் என்.ஐ.டி இயங்கி வருகிறது.
இங்கு, முதல் கட்டமாக ரூ.154 கோடியில் வகுப்பறை கூடம், விடுதிகள், இயக்குனர் பங்களா உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. தொடர்ந்து, 2ம் கட்ட திட்ட பணிகளாக ரூ.548 கோடியில் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி ஆய்வுக் கூடம், பேராசிரியர்கள் குடியிருப்புகள், ஊழியர்கள் குடியிருப்புகள், நிர்வாக வளாகம், வணிக வளாகம், உணவகம், சுகாதார மையம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானங்கள் செய்ய
தீர்மானிக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, ரூ.12.38 கோடி மதிப்பில் ஆய்வக கட்டிடம் கட்ட தீர்மானிக்கப்பட்டு, மத்திய பொதுப் பணி துறை மூலம் பணிகள் நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்கான பூமிபூஜை நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. என்.ஐ.டி. இயக்குனர் சங்கரநாராயணசாமி கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.இக்கட்டுமானம் 10 மாத காலத்திற்குள் முடித்து ஒப்படைக்க இலக்கு நிர்ணயித்திருப்பதாக இயக்குனர் தெரிவித்தார்.

Tags : construction ,laboratory ,Karaikal ,
× RELATED மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...