×

காரைக்கால் பகுதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானிய தொகையை உடனே வழங்க வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் 5வது நாளாக நீடிப்பு

காரைக்கால், பிப்.6: காரைப்பகுதி உள்ளாட்சிகளுக்கான மானியத் தொகையை உடனே வழங்க வலியுறுத்தி, நகராட்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் நேற்று 5ம் நாள் போராட்டமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உள்ளாட்சிகளின் சொந்த வருவாயிலேயே ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்ற நிலைபாட்டை ரத்து செய்து, ஏற்கனவே பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டபடி உள்ளாட்சி ஊழியர்களுக்கு புதுச்சேரி அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும். நகராட்சிகளில் நடைமுறையில் இருந்த சுங்க வரிக்கு ஈடான மானியத் தொகை, கொம்யூன் பஞ்சாயத்துகளில் வீட்டு வரிக்கு ஈடான மானியத்தொகைகளை அரசே சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட 30அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை நான்கு நாட்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து  போராட்டம் நடத்தினர். நேற்று 5ம் நாள் போராட்டமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில், காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர்  ஜெய்சிங், பொதுச் செயலாளர்  ஷேக் அலாவுதீன் காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளன தலைவர் அய்யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஊழியர்களின் உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டத்தால் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவு பதிவது, சான்றிதழ் வழங்குவது, வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது, சுகாதார பணிகள் உட்பட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Tags : area ,Karikal ,
× RELATED சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு