சிதிலமடைந்து முட்புதர்கள் மண்டிய 16 கால் மண்டபம்

கரூர், பிப். 6:கரூரில் இருந்து நெரூர் செல்லும் சாலையில் உள்ள பழமை வாய்ந்த 16 கால் மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் மாவட்டம் அரசு காலனி பகுதியில் இருந்து நெரூர் செல்லும் சாலையில் பஞ்சமாதேவி பகுதியை தாண்டியம் சோமூர் பகுதிக்கு செல்லும் சாலை பிரிவில் 16 கால் மண்டபம் உள்ளது. குறுநில மன்னர்கள் ஆட்சியின் போது, சோமூர் நாட்டின் முகப்பு மண்டபமாக இந்த 16 கால் மண்டபம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மிகவும் பழமை வாய்ந்த இந்த 16 கால் மண்டபத்தில் பல்வேறு வேலைப்பாடுகள் உள்ளன.ஆனால் போதியளவு பராமரிப்பு இல்லாத காரணத்தினால் முட்புதர்கள் வளர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனை சீரமைத்து தர வேண்டும் என இந்த பகுதியினரும், பொதுநல ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.எனவே மிகப்பழமை வாய்ந்த இந்த 16 கால் மண்டபத்தை சீரமைத்து தருவதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கொள்ளவேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : hall ,bush ,
× RELATED அமைச்சர் உதயகுமார் தகவல்...