×

நாளை தை அமாவாசை முன்னோர்கள் ஆசிபெற பித்ரு வழிபாடு

திண்டுக்கல், பிப். 3: நாளை தை அமாவாசையை முன்னிட்டு மூதாதையரை மகிழ்விக்கும் பித்ரு வழிபாடுகள் நடக்கவுள்ளது உள்ளது.இருளை முன்னுறுத்தியே பல்வேறு அரூப நம்பிக்கைகள் மக்களிடம் நிலவி வருகிறது. இதன்படி அமாவாசை நாட்களில் தங்களது வழிபாடுகளை மூதாதையர் புவிக்கு வந்து ஏற்க வருகின்றனர் என்ற ஐதீகம் உள்ளது. இதனால் அமாவாசை நாட்களில் மூதாதையரை நினைத்து விரதம் மேற்கொள்ளும் பழக்கம் அதிகளவில் உள்ளது.ஒவ்வொரு மாத அமாவாசையிலும் இதுபோன்ற விரதத்தை மேற்கொண்டாலும் ஆடி, தை அமாவாசைகள் சிறப்பு பெற்றுள்ளது. பிற அமாவாசையில் விரதம் கடைபிடிக்க இயலாதவர்கள் கூட இந்த ஆடி, தை மாதத்தில் மூதாதையர் வழிபாடுகளை மேற்கொள்வர். இதன்மூலம் தவறவிட்ட விரதங்கள் ஈடுசெய்யப்படும் என்ற கருத்து பரவலாக உள்ளது. பூர்வஜென்ம பாவம் போகும், பித்ருக்களின் கோபம் தணியும் என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இதுபோன்ற அமாவாசை வழிபாடுகள் சிறப்புற்று விளங்கி வருகிறது.இதற்காக பெரும்பாலும் நீர்நிலைகளில் நீராடி படையல் செய்து திதி அளிப்பர்.நாளை (திங்கள்) தை அமாவாசை என்பதால் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இதற்கான வழிபாடுகளுக்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட பல இடங்களுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

Tags : fathers ,
× RELATED உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை...