×

தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் ரூ.4.70 கோடி நலத்திட்ட உதவிகள் அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்

பரமக்குடி, பிப்.3: தமிழகம் முழுவதும் சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம், மகளிர் நலத்திட்ட உதவிகள் மற்றும் திருநங்கையர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று பரமக்குடியில் ராமநாதபுரம் மாவட்ட பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் வீரராகவராவ் தலைமை வகித்தார். மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் குணசுந்தரி வரவேற்றார். முன்னாள் அமைச்சர் சுந்தரராஜ், முன்னாள் எம்.பி.நிறைகுளந்தான், மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல் மாலிக், நகர் செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் மணிகண்டன், பரமக்குடி தொகுதிக்கு உட்பட்ட பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, நயினார்கோவில் வட்டாரங்களில் உள்ள 766 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், நிதியுதவித் தொகை ரூ.4,70 கோடியும், திருநங்கையர்களுக்கு தொழில் வளர்ச்சிக்கு 2 லட்சம், விலையில்லாத தையல் இய்திரம் வழங்கப்பட்டது. ேமலும் பெண்களுக்கான 181 இலவச தொலைபேசி சேவையை தொடங்கி வைத்து அமைச்சர் கூறுகையில், பரமக்குடி எம்எல்ஏ இல்லாவிட்டாலும் நான் இருந்து அனைத்து திட்டங்களையும் பெற்று தந்து கொண்டிருக்கிறேன். எந்த குறையும் என்னிடம் தெரிவியுங்கள். உடன் சரி செய்ய கடமைப்பட்டு உள்ளேன். 400 கோடி பயிர்காப்பீட்டு தொகையை உயர்த்தி, 550 கோடி பெற்று வழங்கப்பட்டுள்ளது. 2017-18ம் ஆண்டுக்கான காப்பீடு தொகை விரைவில் பெற்று வழங்கப்படும். ராமநாதபுரத்திற்கு மருத்துவகல்லூரி மற்றும் விமான நிலையம் கொண்டுவரப்படும் என்றார்.

Tags : Manikantan ,
× RELATED நடிகையை ஏமாற்றிய வழக்கில் அதிமுக...