×

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

நாசரேத், பிப். 6:  நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் மகாத்மா  காந்தியடிகளின் நினைவு தினம் தீண்டாமை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டது. கல்லூரி  முதல்வர் அருள்ராஜ் பொன்னுதுரை தலைமையில் மாணவ, மாணவிகள் தீண்டாமை ஒழிப்பு  உறுதிமொழியை ஏற்றனர்.  முன்னதாக 2  நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. வகுப்பறையில் பேராசிரியர்களின்  முன்னிலையில் மாணவ, மாணவிகள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
ஏற்பாடுகளை  கல்லூரி செயலர் எஸ்.டி.கே.ராஜன், முதல்வர் அருள்ராஜ், நாட்டு நலப்பணித்  திட்ட அலுவலர்கள் அந்தோணி செல்வகுமார், சாமுவேல், கீதாஞ்சலி, பியூலாஹேமலதா,  சாந்திசலோமி மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags : Nasserat Marcashish ,College ,
× RELATED மாமல்லபுரத்தில் சாலை...