×

சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு வழிபாடு

சாத்தான்குளம், பிப். 6:கட்டாரிமங்கலம் அழகிய கூத்தர்  கோயிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. சாத்தான்குளம் அருகே  கட்டாரிமங்கலம் கோயிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு  அழகிய கூத்தர், சிவகாமி அம்மன்,நந்திக்கு  சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை  நடந்தது. தொடர்ந்து பிரதோஷ நாயகர் சிறப்பு அங்காரத்தில் ரிஷப வாகனத்தில்  எழுந்தருளி  உள்பிரகார வீதிஉலா நடந்தது.  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.  அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags : Katarimangalam Temple ,Sathankulam ,
× RELATED சாத்தான்குளம் கொலை வழக்கு 3 மாதத்தில்...