×

பத்ரதீப திருவிழாவையொட்டி திருச்செந்தூர் கோயிலில் திருவிளக்கு பூஜை

திருச்செந்தூர், பிப். 6: திருச்செந்தூர் சிவன் கோயிலில் தை அமாவாசை பத்ர தீப திருவிழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெண்கள் திரளாகப் பங்கேற்று வழிபட்டனர். திருச்செந்தூர் சைவ வேளாளர் ஐக்கிய சங்கம் சார்பில் தை அமாவாசை மற்றும் பத்ர தீபத்திருவிழாவை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆறுமுகநயினாருக்கு சண்முகார்ச்சனை மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதைத்தொடர்ந்து திருக்கோயிலுடன் இணைந்த ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் நடந்த திருவிளக்கு பூஜையை சைவ வேளாளர் ஐக்கிய சங்க நிர்வாகிகள் துவக்கிவைத்தனர். இதில் திரளாகப் பங்கேற்ற பக்தர்கள் குங்குமத்தால் அர்ச்சித்து அம்மனை வழிபட்டனர். மஹா தீபாராதனைக்கு பிறகு திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.  ஏற்பாடுகளை திருச்செந்தூர் சைவ வேளாளர் ஐக்கிய நிர்வாகிகளும், இளைஞர் பேரவை நிர்வாகிகளும் செய்திருந்தனர்.                 

Tags : Thiruvilaku Pooja ,festival ,Tiruchendur temple ,
× RELATED சித்தூர் டாப் லைன் பகுதியில் குண்டாலம்மன் கோயில் திருவிழா கோலாகலம்