×

கயத்தாறு அருகே விவசாயி கொலையில் 3 வாலிபர்கள் கைது

ஓட்டப்பிடாரம், பிப். 6: கயத்தாறு  அருகே விவசாயியை வெட்டிக்கொன்ற 3 வாலிபர்களை போலீசார்  கைதுசெய்தனர்.  தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகேயுள்ள மேல பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (55). விவசாயி. இவரது மனைவி  அனந்தம்மாள் (50). தம்பதியின் மகன் அரிகிருஷ்ணன். கட்டிடத் தொழிலாளியான இவர் துபாயில் வேலை பார்த்து  வருகிறார். இவருக்கும் நெல்லையைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இதனிடையே கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் அரிகிருஷ்ணன்,  வழக்கம்போல் துபாய்க்கு வேலைக்கு சென்ற பிறகு அவரது மனைவிக்கும் அருகேயுள்ள மும்மலைப்பட்டியைச் சேர்ந்த வேல்சாமி மகன்  முத்துமாரியப்பன் (36) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து தெரியவந்ததும் அண்ணாதுரை கண்டித்ததால் முத்துமாரியப்பனுடன் பழகுவதை மருமகள் தவிர்த்தார். இதனால் ஆவேசமடைந்த முத்துமாரியப்பன் அண்ணாதுரையுடன் தகராறில் ஈடுபட்டார்.  இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த கடம்பூர் போலீசார், முத்துமாரியப்பனை கைது செய்தனர். இதில் ஜாமினில் முத்துமாரியப்பன், அண்ணாதுரையை தீர்த்துகட்ட முடிவுசெய்தார்.

 அதன்படி  நேற்று முன்தினம் இரவு அண்ணாதுரை வீட்டிற்குச் சென்ற முத்துமாரியப்பன், அவரது உறவினர்கள் உள்ளிட்ட 3 பேரும் அண்ணாதுரையை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினர். தகவலறிந்து வந்த  மணியாச்சி டிஎஸ்பி திருஞானசம்பந்தம் மற்றும் கடம்பூர் போலீசார் உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து வழக்குப் பதிந்து கொலையாளிகளைத் தேடி வந்தனர். இதனிடையே  முத்துமாரியப்பன், அவரது உறவினர்களான பாலசுப்பிரமணியன் என்ற சேகர் (37), சுப்பையா மகன் கருப்பசாமி (35) ஆகிய 3 பேரும் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று மாலை அங்குசென்ற போலீசார் 3 பேரையும் மடக்கிப்பிடித்து கைதுசெய்தனர்.

Tags : murder ,Kayatharu ,
× RELATED கொலையால் நடந்த முன்விரோதம்: மாஜி மாணவர் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு