×

புதுக்கடை அருகே எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல்

புதுக்கடை, பிப். 6: புதுக்கடை காவல் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செல்வர்ட். நேற்று முன்தினம் இவர் முன்சிறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது புதுக்கடை புளிநின்றவிளை பகுதியை சேர்ந்த அஜின்(26) என்பவர் பைக்கில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்று கொண்டிருந்தார். இதைக்கண்ட செல்வர்ட் அவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அஜின், பைக்கால் செல்வர்ட் மீது மோதுவது போல் வந்து, அவருக்கு ெகாலை மிரட்டல் விடுத்துள்ளார்.இது குறித்து செல்வர்ட் புதுக்கடை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அஜினை கைது செய்தனர்.

Tags : SI ,Pudukkadai ,
× RELATED சென்னை ராயபுரத்தில் எஸ்.ஐ. மீது தாக்குதல்: இளைஞர் கைது