×

ஈரோட்டில் மாயமானவர் கன்னியாகுமரியில் மீட்பு

கன்னியாகுமரி, பிப். 6: ஈரோட்டில் மாயமான இளைஞர் ஒருவர் கன்னியாகுமரியில் சுற்றித்திரிந்த போது குடும்ப நண்பர்களால் கண்டுபிடிக்கப்பட்டார்.ஈரோடு மாவட்டம் பவானிசாகரை சேர்ந்தவர் செல்வம். அரசு மருத்துவமனை ஊழியரான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகன் பூபதிராஜா (29). டிப்ளமோ இன்ஜினியரான இவர் சென்னையில் வேலைபார்த்து வந்தார். தந்தையின் மரணம் பூபதிராஜாவை பாதித்தது. இதில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக  கடந்தாண்டு அக்டோபர் 25ம் தேதி இவர் வீட்டில் இருந்து மாயமானார். இதனால் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் பூபதிராஜாவின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் ஒரு காரில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். கன்னியாகுமரியில் உள்ள ஏடிஎம் ஒன்றில் பணம் எடுத்துக்கொண்டு திரும்பிய போது ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தவர் பூபதிராஜாவை போல் இருக்கிறதே என்று அவரை அழைத்துள்ளார். அப்போது பூபதிராஜா திரும்பி  பார்த்துள்ளார்.இதனால் அது பூபதிராஜாதான் என்று உறுதிபடுத்திய அவர்கள் பூபதிராஜாவை காரில் ஏற்றிக்கொண்டு நேராக கன்னியாகுமரி காவல் நிலையத்துக்கு வந்து தகவல் கொடுத்தனர். இதனையடுத்து போலீசாரும், பூபதியின் குடும்ப நண்பர்களும் அவரிடம் பேசும் போது  பழைய சம்பவங்கள் அனைத்தும் மறந்து போய் மாற்றி மாற்றி பதிலளித்தார்.இந்நிலையில் ஈரோட்டில் உள்ள பூபதிராஜாவின் குடும்பத்தினருக்கும், போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். சுற்றுலா வந்த இடத்தில் காணாமல் போன குடும்ப இளைஞரை மீட்ட சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : magician ,Erode ,Kanyakumari ,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி:...