×

கறம்பக்குடி அருகே அம்புக்கோவிலில் தவில், நாதஸ்வர கலைஞர்களுடன் மாணவ, மாணவிகள் கள ஆய்வு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

கறம்பக்குடி, பிப்.5: கறம்பக்குடி அருகே அம்புக்கோவில் அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜன் அறிவுறுத்தலின்படி, தமிழ் ஆசிரியர் நவநீதகண்ணன் தலைமையில் மாணவ, மாணவிகள் கள பணியில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது அவர்கள் கூறுகையில்,
அம்புக்கோவில் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின் றனர். பல்வேறு குடும்பங்கள் விவசாயம் சார்ந்த தொழில் மற்றும் பல்வேறு கை தொழில்களை செய்து வருகின்றனர். இதில் இசை வேளாளர் சமூகத்தை சேர்ந்த 40 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதில் 30 குடும்பங்கள் குல தொழிலான நாதஸ் வரம் மற்றும் தவில் கலைஞர்களாக இருந்து வருகின்றனர். இக்கிராமத்தில் நாதஸ்வர தவில் கலைஞர்கள் மிகவும் பிரசித்தி பெற்றவர்களாக விளங்கி வருகின்றனர். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளில் இருந்து மாணவர் பருவம் வரை நாதஸ்வரம் தவில் கலைகளை ஆர்வமுடன் கற்று வருகின்றனர்.
குறிப்பாக வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்றும் தங்களுடைய கலை திறமையை சிறப்பித்து வருகின்றனர். எந்த ஒரு விஷேச நாட்களிலும் மங்கள இசையாக நாதஸ்வரம் மற்றும் தவில் கலைகள் போற்றப்படுகிறது.
அரசு நாதஸ்வர தவில் கலைகளை மற்றும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அம்புக்கோவில் கிராமத்தில் இசை பயிற்சி  பள்ளியை உருவாக்க வேண்டும். கிராமத்தில் உள்ள நாதஸ்வர தவில் கலைஞர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் அரசு உடனே சிறப்பு வாய்ந்த வயது முதிர்ந்த நாதஸ்வர தவில் கலைஞர்களுக்கு அம்புக்கோவில் கிராமத்தில் வசிக்கும் கலைஞர்களுக்கு மாதம்தோறும் ஓய்வூதியம் அளிக்க வேண்டும்.
இதன் மூலம் கலைஞர்களின் வாழ்க்கை மேம்படுத்தப்படும்.
எனவே அரசு உடனே விரைந்து உதவி செய்ய வேண்டும் என்றனர்.

Tags : Dadai ,Ambukovil ,artists ,Karambukudi ,
× RELATED கறம்பக்குடி சாலையில் இயற்கை முறையில் புடலங்காய் சாகுபடி