×

புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க மண்எண்ணெய் கேனுடன் வந்தவரால் பரபரப்பு

புதுக்கோட்டை,பிப்.5:  புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க மண்எண்ணெய் கேனுடன் வந்தவரால் புதுகை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
ஏற்பட்டது.
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடை பெற்றது. மனு கொடுப்பதற்காக கந்தர்வகோட்டை தாலுகா பருக்கை விடுதி மேலம் தெருவை சேர்ந்த  அய்யாவு என்பவர் வந்தார்.
அப்போது கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு  பணியில் இருந்த போலீசார் அய்யாவுவை கடும் சோதனை செய்தனர். அய்யாவு  கொண்டு வந்த பையில் மண்எண்ணைய் கேன் இருந்தது. இதையடுத்து போலீசார்  மண்எண்ணை கேனை பறிமுதல் செய்து விசாரணை நடத் தினர்.
அப்போது அவர்  தீக்குளிக்க முயற்சி செய்வதற்காக மண்எண்ணைய் கேனு டன் வந்ததாக தெரிவித்தார்.  தொடர்ந்து போலீசார் அவரை எச்ச ரித்து அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்  கலெக்டரிடம் கொடுத்த மனுவில், 100நாள் வேலை பார் த்து  கொண்டிருந்த போது, எனது ஊரை சேர்ந்த துரைராஜ் என்பவர் தகாத வார்த்தையால்  திட்டி, உருட்டு கட்டையால் தாக்கினார்.
இது குறித்து நான் கந்தர்வகோட்டை  போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டு 4 நாள் புதுக்கோட்டை அரசு  மருத்துவ கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றேன். இந்நிலையில் என்னை  மறுபடியும் தாக்குவதாக கூறி மிரட்டி வருகிறார்.
நான் கொடுத்த புகார் மீது  கந்தர்வகோட்டை போலீசார் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.  எனவே இது குறித்து கலெக்டர் விசாரணை நடத்தி என்னை தாக்கியவர் மீது  நடவடிக்கை எடுத்து, எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.

Tags : complainant ,
× RELATED 11 எம்.எல்.ஏ.க்கள் மீது புகார் அளித்த 6...