×

பேரையூர், புஜங்கராயநல்லூர், கீழமாத்தூரில் திமுக ஊராட்சி சபை கூட்டம்

பாடாலூர், பிப்.5: பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் பேரையூர், புஜங்கராயநல்லூர், கீழமாத்தூர் ஆகிய ஊராட்சிகளில் திமுக ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின்குமார் கலந்துகொண்டு பொதுமக்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் முத்துக்கண்ணு, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் சுந்தர்ராஜ், துணை அமைப்பாளர் குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுப்பிரமணியன் மற்றும் தி.மு.க மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி நிர்வாகிகள், பல்வேறு அணி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கிராமங்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு தேவைகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

Tags : DMK ,Panchayat Council meeting ,Keezmathur ,Peraiyur ,Bhujanguronallur ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...