×

நாகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

நாகை, பிப்.5: நாகை மாவட்டத்தில் 30வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாகை கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். நாகை எம்எல்ஏ தமிமுன்அன்சாரி, நாகை எஸ்.பி. விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார போக்குவரத்து அலுவலர் அழகர்சாமி வரவேற்றார்.
விழிப்புணர்வு பேரணியை கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் கமல்கிஷோர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் தசரதன், கோட்ட மேலாளர் செந்தில்குமார், துணை மேலாளர்கள் ராஜா, சிதம்பரகுமார், உதவி மேலாளர் தனபாலன், மோட்டார் ஆய்வாளர்கள் கருப்புசாமி, சண்முகவேல், சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் தங்ககதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பெற்றோர் கோரிக்கை கொள்ளிடம் அருகே...