×

நாகை புதிய கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் பொதுமக்கள் திரண்டனர்

நாகை, பிப்.5: தை அமாவாசையை முன்னிட்டு நாகை புதிய கடற்கரையில் முன்னோர்களுத்து தர்ப்பணம் கொடுக்க திரளானோர் திரண்டனர்.
இயற்கை எய்திய பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய நாட்களில் திதி கொடுப்பது இந்துக்களின் பாரம்பரியமான வழக்கம். திதி கொடுப்பதால் நம்மை சுற்றிலும் அரூபமாக உலவி வரும் நம் முன்னோர் நம்மை ஆசீர்வதிப்பார்கள் என்பது இந்துக்களின் அதீத நம்பிக்கை. எனவே அன்றைய நாட்களில் பொதுமக்களின் கூட்டம் கடற்கரை பகுதிகளில் அதிகமாக காணப்படும்.
      தை அமாவாசையான நேற்று நாகை புதிய கடற்கரையில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. கடலை பார்த்து வாழை இலைகளை விரித்து பண்பாண்டத்தில் பூர்ணகும்பம் அமைத்து, வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சுபழம் உள்ளிட்ட பழ வகைகளையும், அரிசி, காய்கறிகள் வைத்து, ஊதுபத்தி மற்றும் சூடம் கொளுத்தி குருக்கள் மந்திர உச்சாடனம் செய்ய, பொதுமக்கள் மறைந்த தங்கள் பெற்றோர்களை நினைத்து பிராத்தனை செய்தனர். பின்னர் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், அரிசி ஆகியவற்றை கடல் தண்ணீரில் விட்டு சூரிய பகவானை பார்த்து பிராத்தனை செய்தனர்.
பூம்புகார்: பூம்புகாரில் தை அமாவாசையை முன்னிட்டு நேற்று அதிகாலை சங்கமத்துறையில் கடலும் காவிரியும் கலக்கும் இடத்தில் பொதுமக்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து திதி கொடுத்தனர்.  நேர்த்திக் கடன் செய்தவர்கள் காவிரியும் கடலும் கலக்கும் இடத்தில் குளித்து சூரிய பகவானை தரிசித்து பின்னர் சங்கமத்துறையில் எழுந்தருளியிருக்கும் ரெத்தின புர்னேஸ்வரிஅம்மனை தரிசித்து சிறப்பு அர்ச்சனைகள் செய்து வழிபட்டு சென்றனர்.  இதில் பூம்புகார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தோர் மற்றும் சுற்றுலா வந்த பயணிகள் அதிகளவில் கலந்து கொண்டு தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.  இதனால் கடற்கரையில் கூட்டம் அலைமோதியது.
வேதாரண்யம்: வேதாரண்யத்தில் தை அமாவாவாசையையொட்டி கோடியக்கரையில் ஆதிசேது என்ற சித்தர் கட்ட கடல் பகுதி மற்றும் சன்னதி கடல் என்று அழைக்கப்படும் வேதநதியிலும் மக்கள் புனித நீராடினர். பின்னர் தாங்கள் குடும்பத்தில் மறைந்த மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கடலில் வெற்றிலை பாக்கு. எலுமிச்சை பழம், காதோலை கருகமணி, தேங்காய் ஆகியவற்றை கடலில் விட்டு தர்ப்பணம் கொடுத்தனர்.
பின்னர் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி ஆலயத்தில் உள்ள மணிகர்னிகை தீர்த்தத்தில் சிறப்பு ஏற்பாடு செய்த ஷவரில் புனித நீராடி திருமணக்கோலத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் சுவாமிக்கு அர்ச்சனை செய்து திரளானோர் வழிபட்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை நாகை எஸ்.பி விஜயகுமார் தலைமையில் நாகை கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் பத்திரிநாத், வேதாரண்யம் சரக டிஎஸ்பி ஸ்ரீகாந்த் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீஸ்சார் ஈடுபடுத்தப்பட்டனர். நாகை, பிப்.5: தை அமாவாசையை முன்னிட்டு நாகை புதிய கடற்கரையில் முன்னோர்களுத்து தர்ப்பணம் கொடுக்க திரளானோர் திரண்டனர்.
இயற்கை எய்திய பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய நாட்களில் திதி கொடுப்பது இந்துக்களின் பாரம்பரியமான வழக்கம். திதி கொடுப்பதால் நம்மை சுற்றிலும் அரூபமாக உலவி வரும் நம் முன்னோர் நம்மை ஆசீர்வதிப்பார்கள் என்பது இந்துக்களின் அதீத நம்பிக்கை. எனவே அன்றைய நாட்களில் பொதுமக்களின் கூட்டம் கடற்கரை பகுதிகளில் அதிகமாக காணப்படும்.
      தை அமாவாசையான நேற்று நாகை புதிய கடற்கரையில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. கடலை பார்த்து வாழை இலைகளை விரித்து பண்பாண்டத்தில் பூர்ணகும்பம் அமைத்து, வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சுபழம் உள்ளிட்ட பழ வகைகளையும், அரிசி, காய்கறிகள் வைத்து, ஊதுபத்தி மற்றும் சூடம் கொளுத்தி குருக்கள் மந்திர உச்சாடனம் செய்ய, பொதுமக்கள் மறைந்த தங்கள் பெற்றோர்களை நினைத்து பிராத்தனை செய்தனர். பின்னர் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், அரிசி ஆகியவற்றை கடல் தண்ணீரில் விட்டு சூரிய பகவானை பார்த்து பிராத்தனை செய்தனர்.
பூம்புகார்: பூம்புகாரில் தை அமாவாசையை முன்னிட்டு நேற்று அதிகாலை சங்கமத்துறையில் கடலும் காவிரியும் கலக்கும் இடத்தில் பொதுமக்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து திதி கொடுத்தனர்.  நேர்த்திக் கடன் செய்தவர்கள் காவிரியும் கடலும் கலக்கும் இடத்தில் குளித்து சூரிய பகவானை தரிசித்து பின்னர் சங்கமத்துறையில் எழுந்தருளியிருக்கும் ரெத்தின புர்னேஸ்வரிஅம்மனை தரிசித்து சிறப்பு அர்ச்சனைகள் செய்து வழிபட்டு சென்றனர்.  இதில் பூம்புகார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தோர் மற்றும் சுற்றுலா வந்த பயணிகள் அதிகளவில் கலந்து கொண்டு தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.  இதனால் கடற்கரையில் கூட்டம் அலைமோதியது.
வேதாரண்யம்: வேதாரண்யத்தில் தை அமாவாவாசையையொட்டி கோடியக்கரையில் ஆதிசேது என்ற சித்தர் கட்ட கடல் பகுதி மற்றும் சன்னதி கடல் என்று அழைக்கப்படும் வேதநதியிலும் மக்கள் புனித நீராடினர். பின்னர் தாங்கள் குடும்பத்தில் மறைந்த மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கடலில் வெற்றிலை பாக்கு. எலுமிச்சை பழம், காதோலை கருகமணி, தேங்காய் ஆகியவற்றை கடலில் விட்டு தர்ப்பணம் கொடுத்தனர்.
பின்னர் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி ஆலயத்தில் உள்ள மணிகர்னிகை தீர்த்தத்தில் சிறப்பு ஏற்பாடு செய்த ஷவரில் புனித நீராடி திருமணக்கோலத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் சுவாமிக்கு அர்ச்சனை செய்து திரளானோர் வழிபட்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை நாகை எஸ்.பி விஜயகுமார் தலைமையில் நாகை கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் பத்திரிநாத், வேதாரண்யம் சரக டிஎஸ்பி ஸ்ரீகாந்த் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீஸ்சார் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tags : Nagas ,
× RELATED தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!