நாகை. பிப். 5: நாகையில் காங்கிரஸ் கட்சியினர் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.
பிப்ரவரி 2ம் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு உத்திரப்பிரதேச மாநிலத்தில் அகில இந்திய மகா சபா சார்பில் கேட்சேவுக்கு மலர் தூவியும், காந்தி சிலை மீது துப்பாக்கி சுடு நடத்தியவர்களை கண்டித்தும் நாகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேசிய மீனவர் பேரவை தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நாகை அரசு மருத்துவமனையில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கட்சியின் மாநில பொது குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், நவுசாத், மாவட் மீனவர் அணி தலைவர் சுந்தரவேல், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் சுந்தரவேல், இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் உதயச்சந்திரன் உள்ளிட்ட எராளமானோர் கலந்து கொண்டனர்.