×

காரைக்கால் நித்திய கல்யாண பெருமாள் கோயிலில் பிரமோற்சவ விழாவிற்கு பந்தல்கால்

காரைக்கால், பிப்.5:  காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவ விழாவையொட்டி, பந்தல்கால் முகூர்த்தம் நடைபெற்றது.
காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில், ஆண்டுதோறும் 14 நாட்கள் நடைபெறும் பிரமோத்சவ விழா, வரும் பிப்ரவரி 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது.
இவ்விழாவையொட்டி, நேற்று முன்தினம் பந்தல்கால் முகூர்த்தம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் காரைக்கால் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அசனா, கைலாசநாதர் கோயில் அறங்காவல் குழு துணைத் தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன், உறுப்பினர் பிரகாஷ் மற்றும் முன்னாள் தலைவர் தண்டாயுதபாணி மற்றும் உபயதாரர்கள், ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் பக்த ஜன சபாவினர் கலந்து கொண்டனர்.
கொடியேற்றத்தை தொடர்ந்து, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலாவும், 15ம் தேதி திருக்கல்யாணமும், 19ம் தேதி திருமலைராயன்பட்டினத்தில் திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாளுடன் சேர்ந்து கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி நடைபெறவுள்ளது. பிப்ரவரி 21ம் தேதி சந்திரபுஷ்கரணியில் தெப்ப உத்சவம் நடைபெறுகிறது. 22ம் தேதி விடையாற்றியுடன் விழா நிறைவடைகிறது.

Tags : Karaikal Eternal Kalyana Perumal ,festival ,Brahmotsava ,
× RELATED பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா