×

60 ஆண்டுகளுக்கு பிறகு தை மாதத்தில் மகோதய அமாவாசை குளித்தலை கடம்பன் துறையில் ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம்

குளித்தலை, பிப். 5: தை அமாவாசையானது 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வரக்கூடிய மகோதய புண்ணிய கால அமாவாசை ஆகும். அன்றைய நாளில் கடலிலோ, புண்ணிய நதியிலோ நீராடி மூதாதையருக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பான பலன்களை தரும் என்பது ஐதீகம். வியதிபாத யோகத்தில் முடிவும் அமாவாசையின் முற்பகுதியும் திருவோண நட்சத்திரத்தின் நடுப்பகுதியும், சூரிய உதயமும் நேற்று(திங்கட்கிழமை) சேர்ந்து வந்ததால் மகோதய புண்ணிய கால அமாவாசை
என்று கூறப்படுகிறது.
மேலும் மகத்தான சூரிய உதயம் என்றும், 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழக்கூடியது என்றும், அதனாலேயே கிடைத்ததற்கு அரிய அமாவாசையாகவும் கருதப்படுகிறது. எனவே மகோதய அமாவாசை அன்று கடல், ஆறு, குளம் இவற்றில் ஏதேனும் ஒன்றில் நீராடி தர்ப்பணம் செய்வது சிறப்பாகும்.
இதையொட்டி கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பன்துறையில் அதிகாலை முதலே சுற்று வட்டாரத்திலிருந்து ஆயிரக்கணக்கானோர் காவிரி கடம்பன் துறையில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வடக்கு நோக்கி இருக்கும் கடம்பவனேஸ்வரரை வணங்கி சென்றனர்.

Tags : Thamizhalai Kadamai Kadamai Divyam ,
× RELATED கூடலூர் ஊராட்சி கண்ணூத்துமடையில் 100...